விமான நிலைய பெண் ஊழியர்களுடன் செல்ஃபி: நடிகை சிம்ரனின் மகளிர் தின வாழ்த்து!

 

விமான நிலைய பெண் ஊழியர்களுடன் செல்ஃபி: நடிகை சிம்ரனின் மகளிர் தின வாழ்த்து!

1997ஆம் ஆண்டு விஐபி படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சிம்ரன். பின்பு தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்

தமிழில் பல  கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சிம்ரன். 1997ஆம் ஆண்டு விஐபி படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சிம்ரன்.

 

பின்பு தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதையடுத்து சினிமாவில் இருந்து விலகி  இருந்த சிம்ரன் பேட்ட படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதேசமயம் டிக் டாக்கிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகை சிம்ரன் உலக மகளிர் தின வாழ்த்துகளை இணையத்தில் பதிவிட்டுள்ளார். மார்ச் 8 ஆம் நாள் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை கொண்டாடும் வகையில் சென்னை விமானநிலையத்திலிருந்த பெண் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அற்புதமான பெண்களை சென்னை விமானநிலையத்தில் சந்தித்தேன். அவர்கள் மிகவும் கனிவாக இருந்தார்கள். அவர்களின் கடின உழைப்பு என்னை வியக்க வைக்கிறது.  தாயாகவும் அதே சமயம் பணியில் இருக்கும் பெண்கள்  வாழ்க்கையைச் சமநிலைப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட அற்புதமான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.