விமான நிலையத்தில் விடிய விடிய நடந்த சோதனை : 50 கிலோ தங்கம் பறிமுதல்..!

 

விமான நிலையத்தில் விடிய விடிய நடந்த சோதனை : 50 கிலோ தங்கம் பறிமுதல்..!

2 பேர் கொண்ட குழு,  திருச்சி விமான நிலையத்தில் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்களின் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் 22 பேர் கொண்ட குழு,  திருச்சி விமான நிலையத்தில் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். சுமார் 150 பேரிடம் நடத்தப் பட்ட சோதனையில், 100 பேர் தங்கம் கடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Airport

அந்த 100 பேரும் மலக்குடல், உள்ளாடைகள், பொருட்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கங்களை மறைத்துக் கொண்டு வந்ததுள்ளனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்த அந்த சோதனையின் மூலம் சுமார் 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. தங்கம் கடத்தி வந்த நபர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், வெளிநாடுகளில் இருக்கும் ஏஜெண்டுகள் மூலமாக இவர்கள் தங்கத்தைக் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடிபட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Airport

ஏற்கனவே, கேரளாவை நபர் வெளிநாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்குத் தலையில் உள்ள ‘விக்’ மூலம் தங்கத்தைக் கடத்தி வந்ததும், மற்றொரு நபர் விமானத்தில் உள்ள ஆசன வாயில் மூலமாகத் தங்கத்தைக் கடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.