விமான நிலையத்தில் ரூ. 21.56 லட்சம் மதிப்புள்ள இந்திய, மலேசியப் பணம் பறிமுதல் !

 

விமான நிலையத்தில் ரூ. 21.56 லட்சம் மதிப்புள்ள இந்திய, மலேசியப் பணம் பறிமுதல் !

திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகமாகக் கடத்தப்படுகின்றன.

ttn

ஆசன வாயிலில் வைத்துக் கடத்துவதும், உடைமைகளில் வைத்துக் கடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், நேற்று மலேசியா, கோலாலம்பூரில் இருந்து இரவு 10:35 மணிக்கு விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அந்த விமானம் மீண்டும் இரவு 11:25 மணிக்குக் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்துள்ளது. 

tttn

அந்த விமானத்தில் செல்லவிருந்த நபர்களிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், சென்னையைச் சேர்ந்த பாதர் ரேஷ்மி, தாசினாபேகம் என்ற இரண்டு பெண்களிடம் நடத்திய சோதனையில் ரூ.8.26 லட்சம் இந்திய ரூபாயும் 13.30 லட்சம் மதிப்புள்ள மலேசியன் ரூபாயும் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அந்த பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.