விமானத்தை புல்வெளியில் ஓட்டிச்சென்ற விமானி ! 180 பேருக்கு ஏற்பட்ட நிலை !

 

விமானத்தை புல்வெளியில் ஓட்டிச்சென்ற விமானி ! 180 பேருக்கு ஏற்பட்ட நிலை !

நாக்பூரில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானம் பனிமூட்டம் காரணமாக புல்வெளியில் இறங்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாக்பூரில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானம் பனிமூட்டம் காரணமாக புல்வெளியில் இறங்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Flight

கடந்த திங்கட்கிழமை அன்று ஏ320 ஜெட் விமானம் பயணிகள், ஊழியர்கள் என 180 பேருடன் நாக்பூரில் இருந்து புறப்பட்டது. பின்னர் விமானம் பெங்களூர் வந்தபோது கடும் பனிமூட்டம் நிலவி உள்ளது. இதனால் விமானி அச்சமடைந்தார். தகவல் தொடர்பும் முறையாக கிடைக்கவில்லை. என்றாலும் வேறு வழியில்லை என்பதால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தார்.

Flight

அப்போது விமானம் ஓடுபாதையை தாண்டி உள்ள மைதானத்தில் புல்வெளியில் தரையிறங்கி வேகமாக சென்றது. இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் அச்சம் அடைந்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி மீண்டும் விமானத்தை பறக்க வைத்தார். பின்னர் ஓடுபாதை சற்று தொலைவில் தெரியவர இரண்டாவது முயற்சியில் விமானத்தை பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறக்கினார்.

Grass

இதனால் விமானத்தில் இருந்த 180 பேரும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். இது குறித்து கோ ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இதற்கு அசம்பாவிதத்திற்கு காரணம் கடுமையான மூடுபனிதான் என்றும் ஓடுபாதை தெரியவில்லை என்பதால்தான் புல்வெளியில் தரையிறங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 180 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும்,  விமானியை இடைநீக்கம் செய்து உள்ளதாகவும் கோ ஏர் விளக்கம் அளித்துள்ளது.