விமானத்தில் துடிதுடித்த பெண்.. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி !

 

விமானத்தில் துடிதுடித்த பெண்.. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி !

விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில்  இருந்த ஒரு பெண் காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்து வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து யுனைடட் விமானம் அட்லாண்டிக் சென்று கொண்டிருந்துள்ளது. அதில், 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில்  இருந்த ஒரு பெண் காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்து வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார்.

ttnn

அதனால், உடனே எழுந்து கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது ஆடையை உதறிய போது அதில் இருந்து ஒரு தேள் விழுந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே பணிப் பெண்களிடம் கூறியுள்ளார். அந்த பணிப்பெண்கள் அந்த தேளை பிடித்துள்ளனர். 

ttn

இது குறித்துப் பேசிய யுனைடட் விமான அதிகாரி, ஏற்கனவே இதே போலச் சம்பவம் நடந்துள்ளது. அதுவும் சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து அட்லாண்டாவிற்கு பயணம் செய்த ஒருவரைத் தேள் ஒன்று கடித்தது என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு பணிப்பெண்கள் முதலுதவி அளித்துள்ளனர். பின்னர், விமானம் அட்லாண்டா சென்றடைந்ததும் அந்த பெண் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தேள் கடித்ததால் அந்த பெண்ணுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அந்த பெண் நலமாக உள்ளதாகவும் யுனைடட் நிறுவனம் தெரிவித்துள்ளது.