விமானத்தில் கோளாறு என்று 8 மணி இழுத்தடித்த கோ ஏர்… சகோதரரின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியவில்லையே என்று கதறிய பெண்!

 

விமானத்தில் கோளாறு என்று 8 மணி இழுத்தடித்த கோ ஏர்… சகோதரரின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியவில்லையே என்று கதறிய பெண்!

விமான கோளாறு என்று என்று பயணிகளை எட்டு மணி நேரத்துக்கு மேலாக இழுத்தடித்த கோ ஏர் விமான நிறுவனத்தின் செயல்பாடு கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.
சென்னையிலிருந்து மும்பைக்கு காலை ஐந்து மணிக்கு கோ ஏர் விமானம் செல்கிறது.

விமான கோளாறு என்று என்று பயணிகளை எட்டு மணி நேரத்துக்கு மேலாக இழுத்தடித்த கோ ஏர் விமான நிறுவனத்தின் செயல்பாடு கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.
சென்னையிலிருந்து மும்பைக்கு காலை ஐந்து மணிக்கு கோ ஏர் விமானம் செல்கிறது. நேற்று முன்தினம் காலை 5 மணி விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் அதிகாலை 3.30 – 4 மணிக்கு எல்லாம் வந்துவிட்டனர். ஆனால், விமானத்தில் எந்திரக் கோளாறு அதனால் காலை 5க்கு பதில் 7 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பயணிகளுக்கு உணவு, காபி – டீ கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

go air

பிறகு விமானம் 10 மணிக்கு, பிற்பகல் 12.30க்கு புறப்படும் என்று அவ்வப்போது அறிவிப்பு மட்டுமே வந்தது. கடைசியாக 12.30க்கு விமானம் புறப்படும் என்ற அறிவிப்பின்படி பயணிகள் விமானங்களில் ஏற்றப்பட்டனர். ஆனால், விமானம் 12.30க்கு புறப்படுவதற்கான வழியே தெரியவில்லை. 
சட்டப்படி குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தாமதம் ஆனால் பயணிகளுக்கு உணவு வழங்க வேண்டும். பறக்காத விமானத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பயணிகளை உட்கார வைக்கக் கூடாது என்ற விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டது.
திடீரென்று விமானத்தில் ஒரு பெண் கதறி அழ ஆரம்பித்தார்.

crying

அருகிலிருந்தவர்கள் என்ன ஏது என்று விசாரித்தபோது, அவருடைய சகோதரர் மும்பையில் இறந்துவிட்டதாகவும் அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்காக அதிகாலையிலேயே மும்பை செல்ல இந்த விமானத்தில் டிக்கெட் எடுத்ததாகவும், நான் வருவேன் என்று நீண்ட நேரம் காத்திருந்தவர்கள், வர தாமதம் ஆகும் என்று தெரிந்ததும் இறுதி ஊர்வலத்தை தொடங்கிவிட்டார். சுடுகாட்டுக்காவது நான் வருவேன் என்று எதிர்பார்த்தார்கள். கடைசியில் நான் வர முடியாது என்று தெரிந்ததும் சிதைக்கு தீ மூட்டிவிட்டனர்.

air

என்னுடைய சகோதரரின் முகத்தைக் கடைசியாக ஒரு முறை பார்க்கும் வாய்ப்பும் போய்விட்டதே என்று கூறி அழுதுள்ளனர். இதைக் கேட்ட பயணிகளுக்கு கோபம் அதிகரித்தது. விமான சிப்பந்திகளிடம் சண்டையிட்டனர். டிக்கெட்டை கேன்சல் செய்தாவது கொடுங்கள், நாங்கள் வேறு விமானத்தில் சென்றுகொள்கிறோம் என்று வாக்குவாதம் செய்தனர்.

air

இதைத் தொடர்ந்து விமானம் சற்று நிமிடத்தில் புறப்படும். பயணிகள் அமைதியாக இருந்தால் விமானத்தைக் கிளப்பலாம் என்ற உறுதியளித்தனர். பயணிகள் அமைதியாகி அமர்ந்த பிறகு விமானம் புறப்பட்டது.
எட்டு மணி நேரத்துக்கும் மேலாக கோ ஏர் நிறுவனம் பயணிகளை கையாண்ட விதம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பயணிகள் விமான போக்குவரத்துத் துறைக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.