விமானத்தின் எண்ணிக்கையை குறைத்தது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

 

விமானத்தின் எண்ணிக்கையை குறைத்தது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

விலை குறைந்துள்ள போது ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தது ஏன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைக்குடி: விலை குறைந்துள்ள போது ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தது ஏன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.1,600 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஃபேல் போர் விமானம் விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தவில்லை. 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்? விலை குறைந்துள்ள போது விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார்.