விமானங்களை படிப்படியாக இயக்குவோம்.. ஆனால் விமானத்தில் உணவு வழங்கப்படாது…. இண்டிகோ நிறுவனம் தகவல்…

 

விமானங்களை படிப்படியாக இயக்குவோம்.. ஆனால் விமானத்தில் உணவு வழங்கப்படாது…. இண்டிகோ நிறுவனம் தகவல்…

மத்திய அரசு லாக்டவுனை நீக்கிய பிறகு, படிப்படியாக விமானங்களை இயக்கப்படும் ஆனால் விமானத்தில் கொஞ்சம் நாளைக்கு உணவு வழங்கப்படாது என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பஸ், ரயில் மற்றும் விமானம் உள்பட அனைத்து விதமான போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்தப்படி லாக்டவுன் நாளையோடு முடிவடைய உள்ளது. ஆனால் லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானம்

மீண்டும் விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக பட்ஜெட் விமான சேவை நிறுவனமான இண்டிகோ கூறுகையில், லாக்டவுனுக்கு பிறகு, நாங்கள் எங்களது சேவைகளை மெதுவாக தொடங்குவோம் மற்றும் படிப்படியாக திறனை அதிகரிப்போம். விமானங்களை அடிக்கடி சுத்தம் செய்வோம். மேலும் லாக்டவுனுக்கு பிறகான சிறிது காலத்துக்கு விமானங்களில் உணவுகள் வழங்கப்படாது என தெரிவித்தது.

ரோனோஜாய்

இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரோனோஜாய் கூறுகையில், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது எப்போது பாதுகாப்பானது என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். எங்களது பங்கு, முக்கிய விமான போக்குவரத்தை வழித்தடங்களை மிதமாக தொடங்க திட்டமிட்டுள்ளோம். பின்னர் படிப்படியாக திறனை அதிகரிப்போம். எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் எங்களது ஒற்றை கவனம் இருக்கும்  என தெரிவித்தார்.