விபரீதத்தை உணராமல் குடும்ப பிரச்னைகளை பேஸ்புக்கில் பகிர்ந்த இளம்பெண்: கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

 

விபரீதத்தை உணராமல் குடும்ப பிரச்னைகளை பேஸ்புக்கில் பகிர்ந்த இளம்பெண்: கடைசியில் என்ன  நடந்தது தெரியுமா?

பட்டதாரிப் பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் கிடைத்த தவறான நட்புகளிடம் தனது குடும்பப் பிரச்னைகளை பகிர்ந்ததால் குடும்பத்தினரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு: பட்டதாரிப் பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் கிடைத்த தவறான நட்புகளிடம் தனது குடும்பப் பிரச்னைகளை பகிர்ந்ததால் குடும்பத்தினரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோட்டைச் சேர்ந்த தம்பதி கடந்த 2011ஆம் ஆண்டு வேலைக்காக கனடா சென்று அங்கேயே வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் வந்த தம்பதிக்கு குடும்பத்தினருடன் சில மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கவலையடைந்த  அந்தப் பெண் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடந்துள்ளார்.

fb

ஃபேஸ்புக் பக்கத்தில் தனது குடும்பப் பிரச்சனைகள் குறித்து பதிவேற்றிய பெண்ணுக்கு ஏராளமான ஆறுதல்களும் தேறுதல்களும்  வந்திருக்கிறது. இதையடுத்து ஃபேஸ்புக் நட்புகளிடம் தனது செல்போன் எண்ணைப் பகிர்ந்துள்ளார். அவர்களின் மூலம் சென்னை, சேலம், பெங்களூரு என சில உளவியல் பயிற்சி மையங்களின் தொடர்பும் கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட மையங்களைத் தேடிச் சென்ற பெண் மொத்தமாகத் தனது குடும்பத்தை மறந்துபோனார்.

fb

ஒரு கட்டத்தில் அப்பெண்ணுக்குக்  குழந்தைகளின் நினைவு வந்திருக்கிறது. வீட்டுக்கு வந்த பெண்ணை கடும் போராட்டத்துக்குப் பின் கரூரிலுள்ள மனநல மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.

இதனையறிந்த ஃபேஸ்புக் நண்பர்களில் ஒருவர்,  மருத்துவமனைக்கே வந்து சுயநினைவு இல்லாமல் இருந்த அந்தப் பெண்ணிடம் வீடியோ வாக்குமூலம் எடுத்துள்ளது. அதில் தனது குடும்பத்தினர் தன்னை அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர் என்பதுபோல் அப்பெண் பேசியிருக்கிறார்.

fb

இந்த வீடியோ ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. சில மணி நேரங்களில் வீடியோ உலகம் முழுவதும் தீயெனப் பரவி, கனடா நாட்டு தூதரகம் வரை சென்றுள்ளது. பெண் கனடாவாசி என்பதால் கனடா தூதரகத்தில் இருந்தும் இன்னும் பல்வேறு முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து குவிகின்றன.

மருத்துவரின் தீவிர சிகிச்சையால் தற்போது குணமடைந்துள்ள பெண்ணுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அந்த வீடியோ பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.