விபத்துக்கு இழப்பீடு… ரூ.75 லட்சம் வழங்காததால் ஜப்தி செய்யப்பட்ட பஸ்!

 

விபத்துக்கு இழப்பீடு… ரூ.75 லட்சம் வழங்காததால் ஜப்தி செய்யப்பட்ட பஸ்!

கோவையில் பஸ் மோதியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்காததால் பஸ் ஒன்றை ஜப்தி செய்துள்ளனர்.
கோவையில் 2018ம் ஆண்டு காந்திபுரம் பகுதியில் கீதாஞ்சலி (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

கோவையில் பஸ் மோதியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்காததால் பஸ் ஒன்றை ஜப்தி செய்துள்ளனர்.
கோவையில் 2018ம் ஆண்டு காந்திபுரம் பகுதியில் கீதாஞ்சலி (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து கீதாஞ்சலி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

seized-bus

இது தொடர்பாக கீதாஞ்சலியின் தந்தை ஜனார்த்தனன் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.75 லட்சத்து 74 ஆயிரம் இழப்பீடு வழங்க பஸ் உரிமையாளருக்கு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த தீர்ப்பு வெளியானது. 10 மாதங்கள் ஆன நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இது பற்றி நீதிமன்றத்தில் ஜனார்த்தனன் முறையீடு செய்தார். இதைத் தொடர்ந்து இன்று ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த அந்த பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். தற்போது அந்த பஸ் கோவை நீதிமன்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.