விபத்துக்குள்ளான பேருந்து : சொந்த ஊர் செல்ல வழியின்றி அங்கேயே தங்கியிருக்கும் நேபாளிகள்!

 

விபத்துக்குள்ளான பேருந்து : சொந்த ஊர் செல்ல வழியின்றி அங்கேயே தங்கியிருக்கும் நேபாளிகள்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், நேபாளத்தைச் சேர்ந்த  32 பேர் தமிழகத்தில்  உள்ள கோவில்களைச் சுத்தி பார்ப்பதற்காகத் தமிழகம் வந்துள்ளனர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர், நேபாளத்தைச் சேர்ந்த  32 பேர் தமிழகத்தில்  உள்ள கோவில்களைச் சுத்தி பார்ப்பதற்காகத் தமிழகம் வந்துள்ளனர். ஆம்னி பேருந்தில் வந்த இவர்கள், பல கோவில்களைச் சுற்றிப் பார்த்து விட்டு கடைசியாகக் கன்னியாகுமரி சென்றுள்ளனர். அங்கிருந்த இடங்களையும் பார்வையிட்ட பிறகு ராஜஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே  பெங்களூரு சாலையில் பேருந்துசென்று கொண்டிருந்த போது  டிரைவர் களைப்படைந்ததால் அருகே இருந்த மண்டபத்தில் தங்குவதற்காகப் பேருந்தைத் திரும்பியுள்ளனர்.

ttn

அச்சமயம் பார்த்து எதிரே கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த முனி பேருந்தின் மீது இந்த ஆம்னி பேருந்து மோதியுள்ளது.இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற பயணிகளை மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பிறகு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில், விபத்தில் காயம் அடையாமல் தப்பிய 3 நேபாளிகள் வீடு திரும்ப வழியில்லாமல் விபத்துக்குள்ளான அந்த பேருந்திலேயே தங்கி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tttn

இது குறித்துப் பேசிய நேபாளிகள், கடந்த 8 நாட்களாக இங்கேயே தங்கியுள்ளோம். பேருந்தில் சேதமடைந்துள்ளது, எங்களுடன் வந்த மற்றவர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர். இதில் போலீசார் விசாரணை வேறு உள்ளது. அதனால் தான் நேபாளம் செல்ல வழியில்லாமல் இங்கேயே தங்கி இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.