விபத்தில் விரல்களை இழந்தார் -மாற்று திறனாளி கோட்டாவில் மருத்துவராக அலைந்தார் -வேலை கேட்டும் திரிந்தார் -அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதியுறும் வாலிபர் ..

விபத்தில் விரல்களை இழந்தார் -மாற்று திறனாளி கோட்டாவில் மருத்துவராக அலைந்தார் -வேலை கேட்டும் திரிந்தார் -அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதியுறும் வாலிபர் ..

ஒரு விபத்தில் மூன்று விரல்களை இழந்த ஒரு வாலிபரை மாற்று திறனாளி பிரிவில் “நீட்” எக்ஸாம் எழுதவும் மறுக்கிறார்கள் ,விரலில்லாததால் சாதாரண பிரிவில் வேலை தரவும் மறுக்கிறாரகள் ..அவர் கோர்ட் படிக்கட்டுகளில்  ஏறிவிட்டு  ..இப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு காத்திருக்கறார் ..

madurai

மதுரையை சேர்ந்த அருண்குமார் என்ற 27 வயது வாலிபருக்கு 2008ம் ஆண்டு ஒரு விபத்தில் தன் கையிலிருக்கும் மூன்று விரல்கள் துண்டாகிப்போனது .அதனால் அவர் அப்போது மாற்று திறனாளி பிரிவில் 10 ஆண்டுகளுக்கு சேர்க்கப்பட்டார் .அதை வைத்து 2018ம் ஆண்டு நீட் எக்ஸாம் எழுதி cut -off மார்க்கை விட அதிகமான மார்க் எடுத்தார் .பிறகு அவரை MBBS  சேர்க்கைக்கு கௌன்சிலிங்- க்கு கூப்பிடவே இல்லை ,ஏனென்றால் அவருக்கு இப்போது மெடிக்கல் போர்டு “fit “என சான்றிதழ் கொடுத்ததன் விளைவு .

high court

அதன்பிறகு அவரை  2019 ம் ஆண்டு நீட் எக்ஸாம்- மாற்றுத்திறனாளி பிரிவில் எழுத அனுமதிக்கவில்லை .அதன்பிறகு கோர்ட்டில் வழக்கு தொடந்தார் .வழக்கில் கோர்ட் அவரை சென்னையில் உள்ள அரசு மெடிக்கல் போர்டு முன்பு ஆஜராக சொன்னார்கள் .ஆனால் அவர்கள் இவருக்கு “fit “என சான்றிதழ் வழங்கினார்கள் .
இப்படி மாத்தி மாத்தி அவருக்கு சான்றிதழ் கொடுக்கும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு இப்போது அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார் .

madurai

மேலும் அவர் “டிப்ளமா இன்  மெடிக்கல் டெக்னாலாஜி” படித்திருந்தாலும் எங்காவது லேப் -க்கு வேலை கேட்டு சென்றால் விரல்கள் இல்லாததால் அவருக்கு வேலை தர மறுக்கிறார்கள்.
இப்படி எந்த பிரிவிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளியின்  நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது .