விபத்தில் துண்டான கை! 7 மணி நேர அறுவை சிகிச்சை பிறகு ஒட்டவைத்த மருத்துவர்கள்!! 

 

விபத்தில் துண்டான கை! 7 மணி நேர அறுவை சிகிச்சை பிறகு ஒட்டவைத்த மருத்துவர்கள்!! 

சேலத்தில் சிறுவனுக்கு விபத்தில் துண்டான கை  அறுவை சிகிச்சை மூலம் இணைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் சிறுவனுக்கு விபத்தில் துண்டான கை  அறுவை சிகிச்சை மூலம் இணைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராமன் – சித்ரா தம்பதியரின் 11 வயது மகன் மெளனீஸ்வரன் பள்ளிக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தான். அப்போது அருகிலிருந்த காற்று பிடிக்கும் கம்பரசர் வெடித்து சிதறியதில் மெளனீஸ்வரனின் கை துண்டானது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவனது தாய் சித்ரா துண்டான கையை சேலையில் வைத்துக்கொண்டு சிறுவனை ஆம்பலன்ஸில் அழைத்துக்கொண்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். 

Boy

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சரியான நேரத்தில் வந்ததால் அவரது கையை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடல் உறுப்பு ஒட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேந்திரன் தலைமையில் 20 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் 7 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் கையை இணைத்தனர். மேலும் சிறுவனின் காலில் ஏற்பட்ட தொடை எலும்பு முறிவுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மெளனீஸ்வரனின் தாய் கூறுகையில், விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே துண்டான கையுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டோம். மருத்துவர்களும் துரிதமாக செயல்பட்டு என் மகனுக்கு கையை திருப்பி கொடுத்துள்ளனர். இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும் ஆனால், இங்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. திறமையாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு நன்றி” என தெரிவித்தார். 

இந்த சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ராஜேந்திரன், “ விபத்து ஏற்பட்டு அரை மணி நேரத்திலேயே மருத்துவமனைக்கு வந்ததால் திசுக்கள் ஒட்டவைக்கப்பட்டு உயிர்பிக்கப்பட்டது. சுமார் 20 மருத்துவர்கள் ஒன்றிணைந்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். காலை 9.30 மணிக்கு தொடங்கிய சிகிச்சை இரவு 7 மணிக்கு நிறைவுற்றது, தற்போது சிறுவனின் கை இயல்பாக செயல்பட தொடங்கிவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் முன்புபோல் இயங்க தொடங்கிவிடும். தையல் பிரித்தவுடன் பிசியோதெரபி சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்” எனத்தெரிவித்தார்