விபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்!

 

விபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்!

விபத்தினால் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரிடம் பணம் இல்லாததால், சிகிச்சை நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரோடா: விபத்தினால் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரிடம் பணம் இல்லாததால், சிகிச்சை நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில், 10 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர்  ஜேக்கப் மார்டின். கடந்த 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பரோடாவைச் சேர்ந்த இவர் 127 போட்டிகளில் 23 சதங்களுடன்  8563 ரன்கள் எடுத்துள்ளார்.  

martin

இந்நிலையில் இவர், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சீரியஸாக இருக்கும் அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டுள்ளது. அவரது மருத்துவ சிகிச்சைக்கு தினமும் ரூ.70 ஆயிரம் செலவாகியுள்ளது.குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாத நிலையில் மருத்துவமனை, சிகிச்சையை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து மார்டினின் மருத்துவச்செலவிற்கு  பரோடா கிரிக்கெட் வாரியம்  ரூ.3லட்சம் ரூபாயும், இந்திய கிரிக்கெட் வாரியம் நேரடியாக மருத்துவமனையில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளது.ஆனாலும் மார்டினின் மருத்துவ செலவு 11 லட்சத்தைத் தாண்டி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.