விபச்சார வழக்கில் பிக் பாஸ் போட்டியாளரின் முன்னாள் காதலி கைது!

 

விபச்சார வழக்கில் பிக் பாஸ் போட்டியாளரின் முன்னாள் காதலி கைது!

நடிகை அம்ரிதா தனோவா மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியில் உள்ள  5 ஸ்டார் ஓட்டலில் 
 பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில்,  இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் பாலியல் தொழில்களுக்குப் பெண்களை சப்ளை செய்த பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ttn

இதையடுத்து அம்ரிதா மற்றும் ரிச்சா சிங் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறும் போலீசார், ஓட்டலுக்கு நாங்கள் கஸ்டர்மராக சென்று அவர்களை பிடித்தோம் என்று கூறியுள்ளனர்.  

ttn

கைதான அம்ரிதா  பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் தொழில் செய்து  நடிகை ஒருவர் கைதாகி உள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.