வினாத்தாள் லீக்: அதிரடி முடிவெடுத்த அண்ணா பல்கலைக்கழகம்!

 

வினாத்தாள் லீக்: அதிரடி முடிவெடுத்த அண்ணா பல்கலைக்கழகம்!

தேர்வு வினாத்தாள் வெளியான புகார்களால் அண்ணா பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது தற்காலிய விரிவுரையாளர்கள் வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தேர்வு வினாத்தாள் வெளியான புகார்களால் அண்ணா பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது தற்காலிய விரிவுரையாளர்கள் வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து கணக்குப் பாடத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்தது.இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், வினாத்தாள் தயாரிப்பு,விடைத்தாள் திருத்தும் பணிகளில் இனி தற்காலிகமாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவெடுத்துள்ளது 

முன்னதாக அண்ணா பல்கலைக்கழத்தில் தேர்வுத்தாள் மறு மதிப்பீடு செய்வதில் குளறுபடிகளும், பணபரிமாற்றங்களும் நடைபெறுவதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.