விந்தணுக்களை தானம் செய்யும் நடிகர் ஹரிஷ் கல்யாண்: காரணம் தெரியுமா?

 

விந்தணுக்களை தானம் செய்யும் நடிகர் ஹரிஷ் கல்யாண்: காரணம் தெரியுமா?

முனீஷ்காந்த், ரேணுகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இப்படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. 

பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண்  தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைப் பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் மகனும், இயக்குநருமான சஞ்சய் பாரதி இயக்கிவருகிறார்.

ttn

ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படத்தில்  முனீஷ்காந்த், ரேணுகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இப்படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. 

ttn

இந்நிலையில் ஹரிஷ் வைரமுத்து இயக்கத்தில் அடுத்ததாக  ‘தாராள பிரபு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஹரிஷ் கல்யாண் பிரம்மா போல கலர்புல்லாக உள்ளார். இப்படம் இந்தியில் ஜான் ஆபிரகாம் நடித்த விக்கி டோனர் படத்தின் ரீமேக்காகும். இது விந்தணுக்களைத் தானமாக அளிப்பவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதனால் ஹரிஷ் கல்யாணின் ரசிகர்கள்  மத்தியில் இப்படத்திற்குப் பலத்த எதிர்பார்ப்பு  உருவாகியுள்ளது.