விநாயகர் தோன்றிய விசித்திர கதை

 

விநாயகர் தோன்றிய விசித்திர கதை

எப்போதும் வீட்டின் முதல் பிள்ளை மீது தாய்க்கு அதிகமான பாசம் இருப்பது இயல்பு தானே? விநாயகர் உருவான விதம் எப்படி தெரியுமா? விநாயகர் உருவான விதமே ஒரு விசித்திரமான நிகழ்வு தான். 

எப்போதும் வீட்டின் முதல் பிள்ளை மீது தாய்க்கு அதிகமான பாசம் இருப்பது இயல்பு தானே? விநாயகர் உருவான விதம் எப்படி தெரியுமா? விநாயகர் உருவான விதமே ஒரு விசித்திரமான நிகழ்வு தான். 

lord ganesha

ஒரு முறை பார்வதி தேவி, நீராடுவதற்குச் செல்வதற்கு முன்பாக, முகத்திற்கு பூசுவதற்காக வைத்திருந்த மஞ்சளைப் பிடித்து அதற்கு உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிவிட்டு குளிப்பதற்காகச் சென்றாள். அப்போது சிவன் வர, பார்வதி தேவியால் மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த காப்பாளன் சிவனை உள்ளே விடமாட்டேன் என்று தடுத்து நிறுத்தினார். தன்னை உள்ளே அனுமதிக்காமல் வாயிலிலேயே தடுத்து நிறுத்தியதைக் கண்டு சினம் கொண்ட சிவன், தன்னுடைய பரசுவால் அவன் தலையைத் துண்டித்து விட்டு உள்ளே சென்றார் சிவன். 

lord ganesha

நடந்த விஷயங்கள் அனைத்தையும் உணர்ந்துக் கொண்ட பார்வதி தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன், தன் கண்ணெதிரே முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்கிவிட்டு எவரும் எது செய்தாலும் அந்த செயல் நிச்சயமாக விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவனாக இருப்பாய். அதனால் இன்று முதல் நீ விநாயகன் என்றார். இப்படி விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று தான் விநாயகர் அவதாரம்