விநாயகர் சிலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

 

விநாயகர் சிலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அனுமதி கோரி நீதிமன்றத்தில் பல தரப்பினர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் தமிழக அரசின் முடிவு சரியானது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தளர்வுகள் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு இன்று பதில் அளித்த தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் ஏதும் இல்லை என்றும் மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

விநாயகர் சிலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நேற்று வழக்கறிஞர் ராமசாமி, விநாயகர் சிலைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை காலை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.