விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் | தினை மாவு, பனைவெல்ல கொழுக்கட்டை 

 

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் | தினை மாவு, பனைவெல்ல கொழுக்கட்டை 

kozhukattai

தேவையானவை: 
தினை மாவு – ஒரு கப்
பனைவெல்லம் – ஒரு கப்
தேங்காய் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
சுக்குப் பொடி – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

kozhukattai

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தினை மாவை வெறும் கடாயில் நன்றாக வறுத்து உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடங்கள் ஊற விடவும். பனை வெல்லத்தை நீரில் கரைத்து நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல்களைச் சேர்த்து சுட வைத்து, கொதித்து வரும் போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவி, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான தினைமாவு கொழுக்கட்டை தயார்.