விநாயகர் சதுர்த்தி பரிதாபங்கள்… 11உயிர்களை பலி வாங்கிய கொண்டாட்டங்கள்!

விநாயகர் சதுர்த்தி பரிதாபங்கள்… 11உயிர்களை பலி வாங்கிய கொண்டாட்டங்கள்!

பண்டிகைகளும், திருவிழாக்களும் மக்களிடையே கொண்டாட்டங்களையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதற்காக மட்டுமேவா ஏற்படுத்தப்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்களுடனும், உறவினர்கள்,நண்பர்களுடனும் மகிழ்ச்சியைப் பரிமாறி, கடவுளுக்கு நன்றி சொல்லி, அகத்தின் இருளை அகற்றி…என்று ரமலானோ, கிறிஸ்துமஸ், தைப் பொங்கலோ..எத்தனை உன்னதமான தத்துவங்களை உள்ளடக்கியிருக்கும் திருவிழாக்களும், பண்டிகைகளும் நம் நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றன..

boat

ஆனால், கவலையளிக்கும் விதமாக சமீப காலங்களாக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் இந்திய மக்களை அச்சுறுத்தி வருகிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் தவறில்லை… அதை எல்லோரையும் உச்சரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது அபத்தம் தானே? அப்படி ஆரம்பித்த கோஷங்கள், பக்தர்களிடையே பக்தியை வளர்ப்பதற்கு பதிலாக வன்மத்தை வளர்த்து வளர்கிறது. ஒவ்வொரு வருட விநாயகர் சதுர்த்திக்கும் பக்கத்து தெருவில் இருக்கிற மசூதி வழியாகவே ஊர்வலம் போவோம் என்று கெத்து காட்டி வம்பிழுக்கும் பழைய முரட்டு பக்தர்கள் எல்லாம் இப்போது திருந்தி விட்டார்கள். ஆனால், இப்படியெல்லாம் ஆடி பாடி கூத்தடித்து, பிரச்சனை செய்து, மாஸ் காட்டி எல்லோரையும் தொந்தரவு செய்து பிள்ளையாரைத் தூக்கி கடலில் போட்டு, அவர் மீது மிதித்து ஏறி நின்று ‘தையா.. தைய்யா..’ என்று டான்ஸ் ஆடி விநாயகர் சிலையை சிதறு தேங்காய்ப் போல் உடைத்தால் தான் விநாயகர் சதுர்த்தி பலன்கள் கிடைக்கும் என்று யாரோ புண்ணியவான்கள் வகுப்பு எடுத்திருப்பார்கள் போல…

boat

அப்படி ஒரு கும்பல் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கட்லாபுரா ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க படகில் கொண்டுச் சென்ற போது, படகில் போட்ட  ஆட்டத்தில் படகு கவிழ்ந்து 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேரை காணவில்லை. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.