வித்தியாசமான சுவையில் கருப்பட்டி ரசகுல்லா

 

வித்தியாசமான சுவையில் கருப்பட்டி ரசகுல்லா

தேவையான பொருட்கள்
பால்             – 1லிட்டர்
எலுமிச்சை        – 2
ஏலக்காய்        – 3
கருப்பட்டி        – 2கப்

தேவையான பொருட்கள்
பால்             – 1லிட்டர்
எலுமிச்சை        – 2
ஏலக்காய்        – 3
கருப்பட்டி        – 2கப்

செய்முறை

karupattii rasagula

பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி கொதிக்கும் போது எலுமிச்சம் பழச்சாற்றை கலக்க வேண்டும். பாலுடன் எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்ததும்  பால் திரிந்து, தனியாகவும், தண்ணீர் தனியாகவும் வரும்.. அடுப்பை அணைத்து சுத்தமான வெள்ளைத்துணியில் திரிந்த பாலை ஊற்றி, தண்ணீர் முழுவதையும் நன்கு பிழிந்து விடவேண்டும். துணியில் தங்கியுள்ள கெட்டியாக திரிந்த பாலில் இன்னொரு முறை குளிர்ந்த தண்ணீர் விட்டு பிழிந்து கொள்ளவும். இதனால் எலுமிச்சையின் புளிப்புத் தன்மை நீங்கி விடும்.
நன்கு நீரை பிழிந்த பின் கலவையை மெதுவாக தேய்த்து விட வேண்டும். அதன்பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டில் தனியாக வைக்கவும். இப்பொழுது கருப்பட்டியை ஒன்றரைக்கப் நீர் விட்டு கொதிக்க வைக்கவேண்டும். பின் வடிகட்டி 1கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அடுப்பில்  வைத்து கொதிக்க விட வேண்டும். இதில் நாம் உருட்டி வைத்துள்ள பாலாடை உருண்டைகளைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும். ஆறிய பின் பரிமாறலாம். சுவையான ஆரோக்கியமான கருப்பட்டி ரசகுல்லா ரெடி