வித்தியாசமாக ஹெல்மேட் அணிந்து கர்பா டான்ஸ்! களைகட்டிய நவராத்திரி திருவிழா

 

வித்தியாசமாக ஹெல்மேட் அணிந்து கர்பா டான்ஸ்! களைகட்டிய நவராத்திரி திருவிழா

குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் டான்ஸ் குழுவினர் ஹெல்மேட் அணிந்து நடனம் ஆடியது எல்லோரையும் ஈர்ததது.

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பண்டிகை இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. இதனால் நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். குறிப்பாக மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் மிகவும் பிரம்மாண்டமாகவும், கலர்புல்லாகவும் இருக்கும். நவராத்திரி பண்டிகையின் போது கர்பா நடனம் ஆடப்படுவது வழக்கம்.

ஹெல்மேட் அணிந்து கர்பா நடனம்

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை அண்மையில் தொடங்கியது. இதனையடுத்து நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலம் சூரத்திலும் பண்டிகை களைகட்டியுள்ளது. அந்நகரில் வி.ஆர். மகாலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  ஒரு டான்ஸ் குழுவினர்  ஹெல்மேட் அணிந்து கர்பா நடனம் அணிந்தனர். இது பொதுமக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

பிரபலமாகி வரும் பாடி பெயிண்டிங்

இது குறித்து ஒருவர் கூறுகையில், மக்களிடம் ஹெல்மேட் மற்றும் சீட் பெல்ட் அணியும் பழக்கம் வர வேண்டும். அப்படி செய்தால் நீண்ட நாட்களுக்கு தங்கள் வாழ்க்கையில் அனைத்து திருவிழாக்களையும் மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என தெரிவித்தார். நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தற்போது உடலில் வண்ணம் பூசுவதும் பிரபலமாகி வருகிறது. சில சூரத் பெண்கள் தங்களது முதுகில் சந்திரயான் 2, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் போன்ற சமூக விஷயங்களையும் படமாக வரைந்துள்ளனர். மேலும் ஒரு சிலர் மோடி,டிரம்ப் உருவங்களையும் வரைந்துள்ளனர்.