வித்தவுட் டிக்கெட் ஆசாமிகள் 89 லட்சம் பேர்!!! சிக்காதது எத்தனை கோடி பேரோ?

 

வித்தவுட் டிக்கெட் ஆசாமிகள் 89 லட்சம் பேர்!!! சிக்காதது எத்தனை கோடி பேரோ?

2016-17 ஆம் ஆண்டில் 405 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு 441 கோடியும், கடந்த ஆண்டு 530 கோடி ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதைவிட கொடுமையான விஷயம், இந்த நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும், 89 லட்சம் பேர் உரிய பயணசீட்டு இல்லாமல் பிடிபட்டிருக்கிறார்கள்.

உரிய பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணம்செய்து பிடிபட்டவர்களிடம் கடந்த மூன்று வருடங்களில் வசூலிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு என்று அரைகுறை உயிரோடு இருக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. முறையற்றவர்கள்பற்றிய முறையான பதிலை ரயில்வே நிர்வாகம் அளித்திருக்கிறது. இதன்படி, 2016-17 ஆம் ஆண்டில் 405 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு 441 கோடியும், கடந்த ஆண்டு 530 கோடி ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதைவிட கொடுமையான விஷயம், இந்த நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும், 89 லட்சம் பேர் உரிய பயணசீட்டு இல்லாமல் பிடிபட்டிருக்கிறார்கள்.

Ticket Examiner on duty

டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களிடம் டிக்கெட் கட்டணத்தோடு 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. செலுத்த முடியாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள், ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டு ரயில்வே சட்டம் செக்சன் 137ன்படி ஆறு மாதங்களுக்கு எண்ணிய கம்பிகளையே திரும்பத்திரும்ப எண்ணும்படி சிறையில் அடைக்கப்படுவார்கள். அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். டிக்கெட் இல்லாமல் பிடிபட்டது 89 லட்சம் பேருன்னா, சிக்காமல் டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆவது எத்தனை கோடி பேரோ? இவிங்களை நம்பி 5 டிரில்லியன் டாலர் எக்கானமி எப்படி ஆக்குறது?