விதிமுறைகள் மக்களுக்கு மட்டும்தான்… 20 பெண்களுடன் நட்சத்திர விடுதியில் தஞ்சம் புகுந்த தாய்லாந்து மன்னர்

விதிமுறைகள் மக்களுக்கு மட்டும்தான்… 20 பெண்களுடன் நட்சத்திர விடுதியில் தஞ்சம் புகுந்த தாய்லாந்து மன்னர்

தாய்லாந்தில் கொரோனா பரவாமல் தடுக்க மிகக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு 20 பெண்களுடன் மன்னர் நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் கொரோனா பரவாமல் தடுக்க மிகக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு 20 பெண்களுடன் மன்னர் நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் மன்னராக இருப்பவர் மஹா வஜிரலொங்கோன் எனப்படும் 10வது ராமா. உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் வேளையில், தாய்லாந்தில் கொரோனா பரவலைத் தடுக்க மிகக் கடும் கட்டுப்பாடுகளை இவர் விதித்துள்ளார்.

thailand-corona

ஆனால் இவர் தற்போது தாய்லாந்தில் இல்லை. ஜெர்மனியில் உள்ள ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய மனைவிகள் உள்பட 20 பெண்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் என்று ஒரு மிகப்பெரும் கூட்டத்தோடு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருடன் 120க்கும் மேற்பட்டோர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலக நாடுகள் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள், பணியாளர்களை தாய்லாந்துக்கு திருப்பி அனுப்ப முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மன்னருடன் சமீபத்தில் நான்காவதாக திருமணம் செய்துகொண்ட சுதிடா உள்ளாரா என்று தெரியவில்லை என்று அந்த செய்திகள் கூறுகின்றன.

thailand-king-78

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க ஹோட்டல் அறைகள் வாடகைக்கு விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தாய்லாந்து மன்னர் மற்றும் அவருடன் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. மன்னர் மற்றும் அவருடன் உள்ளவர்கள் ஒரே இடத்திலிருந்து வந்தவர்கள், அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. வெளியே சென்று வருவதும் இல்லை என்பதால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.