விதவிதமான வடிவங்களில் பன்னீர் கட்லெட்

 

விதவிதமான வடிவங்களில் பன்னீர் கட்லெட்

ஒரே விதமான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடிக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான வடிவங்களில் கட்லெட்கள் செய்து அசத்தலாம். பன்னீர், வெண்ணெய், கரம் மசாலா என்று வயதானவர்கள் தவிர்க்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து செய்வதால், குழந்தைகளை மனதில் வைத்து இதைச் செய்யவும்

ஒரே விதமான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடிக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான வடிவங்களில் கட்லெட்கள் செய்து அசத்தலாம். பன்னீர், வெண்ணெய், கரம் மசாலா என்று வயதானவர்கள் தவிர்க்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து செய்வதால், குழந்தைகளை மனதில் வைத்து இதைச் செய்யவும்.  

panner cutlet

தேவையான பொருட்கள்
துருவிய பன்னீர் – ஒன்றரை கப்
வெங்காயம்  – 2 பெரியது
குடைமிளகாய் – 1கப்
கரம் மசாலா – 1தேக்கரண்டி
வெண்ணெய் – 1/2தேக்கரண்டி
கார்ன் மாவு – 1டேபிள்ஸ்பூன்
மைதா – 1டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ரவை  – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை
வாணலியில், வெண்ணெயைப் பயன்படுத்தி துருவிய பன்னீரை போட்டு, நன்றாக சிவந்து விடாமல் நல்ல மணம் வரும் வரை  வதக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு பெரிய வெங்காயங்களையும், பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதே வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் இப்பொழுது

paneer cutlet

நறுக்கிய குடைமிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது, அடுப்பிலிருந்து இறக்கி, வதங்கிய அனைத்துப் பொருட்களையும் கொஞ்சம் ஆறியதும், சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதனை குழந்தைகள் விரும்பும் விதவிதமான வடிவங்களில் கட்லெட்டுகளாக செய்து ரவையில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து சாஸுடன் பரிமாறலாம். மொறு மொறுவென்று அசத்தலான ஸ்நாக்ஸ் இன்னொரு முறை வேண்டுமென்று குழந்தைகளைக் கேட்க தூண்டும்.