விண்வெளி பயணத்துக்கு நாஸாவால் தேர்வு செய்யப்பட்ட இந்தியர்!

விண்வெளி பயணத்துக்கு நாஸாவால் தேர்வு செய்யப்பட்ட இந்தியர்!

அடுத்து நாஸா நடத்தும் விண்வெளி ஆய்வுகளுக்காக செவ்வாய் கிரகத்துக்கோ நிலவுக்கோ அனுப்ப தேவையான வீரர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து வருகிறது நாஸா.அதற்காக 2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் 17 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து இரண்டாண்டுகள் பயிற்சியளித்தது நாஸா.அந்தப் பயிற்சியை 11பேர் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு நாஸா ஈடுபட இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையப்பயணம் மற்றும் நிலவு செவ்வாய்கிரக ஆய்வுப் பயணங்களிலும் இவர்கள் ஈடுபடுத்தப் படுவார்கள்.இந்தப் 11 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா ஜான் உர்புத்தூர் சாரி என்கிற 41 வயது இந்திய வம்சாவளியினரும் ஒருவர் .இவரது தந்தை ஸ்ரீனிவாச சாரி எழபதுகளில் பொறியியல் படிப்பதற்கு அமெரிக்கா வந்தவர்.அமெரிக்காவின் செடர் ஃபால்ஸ் பகுதியைச் சேர்ந்த ஹாலியை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்

srinivasan

.ஸ்ரீநிவாஸ் ஹாலி தம்பதியின் மகனான ராஜா சாரி இப்போது அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருக்கிறார். கலிஃபோர்னியா மாநிலத்தில் இருக்கும் எட்வர்ட்ஸ் ஏர்ஃபோர்ஸ் பேசில் பணிபுரியும் ராஜா சாரி விண்வெளி வீரராக வேண்டும் என்கிற ஆர்வத்தில் நாஸா நடத்திய தேர்வில் கலந்துகொண்டு வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்திருக்கிறார்.வரும் 2024 ம் ஆண்டில் அமெரிக்கா முதன் முதலாக ஒரு பெண்ணை வின் வெளிக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கிறது.

nasa

அதற்கு முதற்கட்டமாக அமெரிக்காவும் ஒரு விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.அதன் பணிகள் வரும் 2020 நவம்பருக்குள் முடிவடையும் என்று தெரிகிறது. 2024 முதல் 2030 வரை அமெரிக்கா வருடம் தோறும் நிலவுப்பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ‘ ஆர்டெமிஸ்’ திட்டம் என்று அமெரிக்கா பெயரிட்டு இருக்கிறது. அந்தத் திட்டத்தில்தான் ராஜா ஜான் உற்பத்தூர் சாரியும் இடம் பெற்று இருக்கிறார்.