விண்வெளிக்கே போறாங்க சபரிமலைக்கு போகக்கூடாதா? ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி

 

விண்வெளிக்கே போறாங்க சபரிமலைக்கு போகக்கூடாதா? ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி

பெண்கள் விண்வெளிக்கே செல்லும்போது சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது? என ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு: பெண்கள் விண்வெளிக்கே செல்லும்போது சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது? என ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.இதனையடுத்து தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.

தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பை வரவேற்கிறேன். நாடு வளர்ச்சி அடைந்த நிலையில் விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய பெண்கள், ஆண்கள் செல்லும் போது ஏன் கோவிலுக்கு பெண்கள் செல்ல கூடாது? என்றார்.