விட்டாச்சு லீவு! 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

 

விட்டாச்சு லீவு!  17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் விழுப்புரம்,பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், தருமபுரி, விருதுநகர் உள்ளிட்ட பதினேழு மாவட்டங்களிலும் இன்றிலிருந்து அடுத்து வரும் இரு தினங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளது

கடந்த இரு தினங்களாக, வடகிழக்கு பருவ  மழை துவங்கியிருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் வளிமண்டலத்தின் மேலடுக்குகளில் ஏற்பட்டிருக்கும் சுழற்சியின் காரணமாக  கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும், புதுவையிலும் இன்றிலிருந்து அடுத்து வரும்  இரு தினங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், தருமபுரி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பதினேழு மாவட்டங்களிலும் இன்றிலிருந்து அடுத்து வரும் இரு தினங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அறிவித்திருக்கிறது.

மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்

குமரிக்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்த சூறைக்காற்று வீசுமென்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், பல பள்ளிகளிலும், கல்லூரிகளில் தேர்வுகள் நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால், இந்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து விட்டாச்சு லீவு என்று மாணவர்கள் ஆர்வமுடன் விடுமுறையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.