விடுவிக்கப்பட்ட முதலாளி; சித்ரவதை செய்து கொல்லப்பட்ட அடலினாவுக்கு நீதி வேண்டும்?!…

 

விடுவிக்கப்பட்ட முதலாளி; சித்ரவதை செய்து கொல்லப்பட்ட அடலினாவுக்கு நீதி வேண்டும்?!…

அடலினா மீட்கப்பட்ட போது அம்பிகா வீட்டு வாசலில் நாய் அருகே உறங்கிக் கொண்டிருந்தார். அவர் கை, கால்களில் தீக்காயங்கள், புண், அதனால் வீடு அழுக்காகிவிடும் என அம்பிகா தனது வீட்டு வாசலில் படுக்க வைத்திருக்கிறார்.

மலேசியா: சித்ரவதை செய்து கொல்லப்பட்ட அடலினா சா (21) எனும் பெண்ணுக்கு நீதி வேண்டி change.org எனும் வலைதளத்தின் மூலம் மனு அளித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிகமான சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கடுமையான வேலை, ஓய்வு அளிப்பதில்லை, பாலியல் சித்ரவதை என துயர்மிகுந்ததாக இருக்கிறது அவர்களின் வாழ்க்கை.

malaysia

இப்படியான கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்தான் அடலினா சா, கடந்த 2018-ஆம் பிப்ரவரி 11-ஆம் தேதி புகிட் மெர்டாஜாம் மருத்துவமனையில் அவர் இறந்துபோனார். முதலாளி அம்பிகா கொடுத்த சித்ரவதையால் அடலினா இறந்தது தெரியவந்தது. அடலினா துப்புரவு பணி செய்யும் அடிமட்ட ஊழியர், 2 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அம்பிகாவிடம் பணிபுரிந்து வந்தவர்.

hos

அடலினா மீட்கப்பட்ட போது அம்பிகா வீட்டு வாசலில் நாய் அருகே உறங்கிக் கொண்டிருந்தார். அவர் கை, கால்களில் தீக்காயங்கள், புண், அதனால் வீடு அழுக்காகிவிடும் என அம்பிகா தனது வீட்டு வாசலில் படுக்க வைத்திருக்கிறார். இந்த வழக்கில் இருந்து அம்பிகாவுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி விடுதலை அளிக்கப்பட்டது. அடலினா சாவுக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை.

sdfg

மனித உரிமைகள் ஆணையம் இதுபோன்று 1,000 வழக்குகளை பதிவு செய்துள்ளது.  அடிமட்ட ஊழியர்களை ஒப்பந்தத்தின் கீழ் கொடுமை செய்வதற்கு எதிரான சட்டம் மலேசிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அடலினா வழக்கில் நீதி வேண்டி  change.org எனும் வலைதளத்தின் மூலம் மனு அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அன்புமணி தொகுதியில் மறு வாக்குப்பதிவு… அதிர வைக்கும் தேர்தல் ஆணையம்.. கலக்கத்தில் பாமக..!