விடுமுறை நாட்களில் 50% கட்டணக் குறைப்பு: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!

 

விடுமுறை நாட்களில் 50% கட்டணக் குறைப்பு: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!

வேலை நாட்களை ஒப்பிடும் பொது விடுமுறை  நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் கூட்டம் குறைவாகவே இருக்கும். 

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரயில்களை ஒப்பிடுகையில், இந்த ரயில் மிக விரைவாகச் சென்று பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஒரு சில மக்கள் அதில் டிரிப் அட்டை போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு தினந்தோறும் பயணிக்கின்றனர். ஆனால், சில மக்களுக்கு மெட்ரோ ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளது என நினைக்கின்றனர். வேலை நாட்களை ஒப்பிடும் பொது விடுமுறை  நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் கூட்டம் குறைவாகவே இருக்கும். 

Metro

அதனால், விடுமுறை நாட்களில் மக்களின் கூட்டத்தை ஈர்க்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 50% கட்டண சலுகை அளிக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பயணிகளின் நலனுக்காக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 50% கட்டண சலுகை அளிக்கப்படும். ட்ரிப் அட்டை பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை கிடையாது. இந்த கட்டண குறைப்பு வரும் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். மறு அறிவிப்பு வரும் வரை இந்த கட்டண சலுகை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.