விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக 14ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் : டாக்டர். ராமதாஸ் ட்வீட் !

 

விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக 14ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் : டாக்டர். ராமதாஸ் ட்வீட் !

இந்த வருடம் தைப்பொங்கல் வரும் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

விடுமுறை என்றாலே ஜாலி தான். அரசு விடுமுறை வேலை நாட்களில் வந்தா மக்கள் எல்லாரும் டபுள் ஹேப்பி. இந்த வருடம் தைப்பொங்கல் வரும் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அதாவது வரும் செவ்வாய்க் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை பொங்கல் பண்டிகை. அதற்கு முந்தைய நாளான திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் எழுந்து வருகிறது. அந்த நாள் விடுமுறை என்று அறிவிக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி தெரிவிப்பதாகத் தெரிவித்திருந்தார். 

tt

திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டால், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையோடு சேர்த்து 8 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது குறித்து பா.ம.க தலைவர் அவரது ட்விட்டர் பக்கத்தில், ” தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும்!.

பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியைக் கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்குச் சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்கப் பள்ளிக் கல்வித்துறைக்குத் தமிழக அரசு ஆணையிட வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.