விடுதலை புலிகள் தலைவராக நடிக்கும் பாபி சிம்ஹா!

விடுதலை புலிகள் தலைவராக நடிக்கும் பாபி சிம்ஹா!

தமிழ் சினிமாவில் வில்லன் முதல் குணச்சித்திர வேடம் வரை வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் பாபி சிம்ஹா, இம்முறை புது விதமான சர்ச்சைக்குரிய நபரின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

சென்னை: நடிகர் பாபி சிம்ஹா ஈழத்தமிழர்களுக்காக போராடிய விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வில்லன் முதல் குணச்சித்திர வேடம் வரை வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் பாபி சிம்ஹா, இம்முறை புது விதமான சர்ச்சைக்குரிய நபரின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

’சாமி 2’ படத்தை தொடர்ந்து ‘அக்னிதேவ்’, ரஜினியின் ‘பேட்ட’ போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா, ஈழ மக்களுக்காக போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடிக்கிறார். ‘சீறும் புலிகள்’ படத்தில் பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. 2009ம் ஆண்டு நடந்த ஈழப்போரில் இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ltteprabhakaran

இந்நிலையில், ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ’லைட்மேன்’, ‘நீலம்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இயக்கவிருக்கிறார். இவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

வெங்கடேஷ் குமார் இயக்கிய ‘நீலம்’ திரைப்படம் இலங்கை ஈழப்போரை முன்வைத்து உருவானதால், தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்பட்டு திரைப்படம் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.