‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன்’: தேச துரோக வழக்கு விசாரணையில் வைகோ பதில்!

 

‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன்’: தேச துரோக வழக்கு விசாரணையில் வைகோ பதில்!

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன் என்று தேசத் துரோக வழக்கின் விசாரணையின் போது  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சென்னை: விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன் என்று தேசத் துரோக வழக்கின் விசாரணையின் போது  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

vaiko

கடந்த  2009ஆம் ஆண்டு நான் குற்றம்சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

collector office

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வைகோ,  ‘நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசு தான்  காரணம். நான் மத்திய அரசு மீது எந்த காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.  கடந்த 2002ஆம் ஆண்டு நான் மக்களவையில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன்,நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதை சுட்டிக்காட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதற்காக என் மீது பொடா சட்டம் சட்டம் பாய்ந்தது. நான் கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றிப் பேசுவது குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது’ என்றார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.