விடுகதையும் ஆன்மீக அர்த்தங்களும்

 

விடுகதையும் ஆன்மீக அர்த்தங்களும்

விடுகதைகளின் ஆன்மீக அர்த்தங்களும் அதன் உன்னத வரலாற்று பதிவுகளையும் பற்றி பார்போம் .

ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர்.

விடுகதைகள் ‘மக்களின் அறிவுத்திறனின் வெளிப்பாடு’ என அறிஞர்கள் வருணிக்கின்றனர். தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறைபொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவமே விடுகதை. விடுகதைகள் கற்பனை வளத்துடன் கவிதையாகவும் கதையாகவும் உரைநடையாகவும் வழங்கி வருகின்றன. அதே போல் ஆன்மீக விடுகதைகளையும் நம் முன்னோர்கள் பல்வேறு பண்டைய நூல்களில் கூறிவிட்டுத்தான் சென்றுள்ளனர்.ஆன்மீக விடுகதைகளில் ஒரு சிலவற்றை பார்போம்.

 

1.தட்டானுக்கு சட்டைபோட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்

இந்த விடுகதையானது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.

இதற்கு புராணத்தை வைத்து விளக்கிவிடலாம். 

தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். 

(தட்டான் – மஹாபலிச் சக்கரவர்த்தி )

தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள்.

mahaabali

நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். ( குட்டை பையன் – வாமன அவதாரத்தை குறிக்கிறது. ) 

ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்தார் . ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார். பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார்.

அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மஹா பலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள்.

 

2.பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை

:

என்பதற்கான விளக்கம்  குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள்.ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பொருளுதவி செய்தவர் நம் குபேரன்.

varaaga

ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன் ஆவார். குபேரனுக்கு வட்டி கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்.

அதனால் (வராகம் – பன்றி முகம் உடையவர் ) 

ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.

tamil vidukathaigal

இது தான் “பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரன் என்ற விடுகதைக்கான விளக்கம்