விடிய விடிய நடைபெற்ற இஸ்லாமியர்களின் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் !

 

விடிய விடிய நடைபெற்ற  இஸ்லாமியர்களின்  சிஏஏ எதிர்ப்பு போராட்டம் !

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை – வண்ணாரப்பேட்டையில்  கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. எத்தனை போராட்டங்கள் நடந்தாலும்,  சிஏஏ சட்டம் திரும்பிப்பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்து விட்டது.

ttn

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை – வண்ணாரப்பேட்டையில்  கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் இஸ்லாமியருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலர் படுகாயம் அடைந்தனர். இதனால், போலீசாரை கண்டித்து இஸ்லாமியர்களின்  சிஏஏ எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றது. இதனையடுத்து, சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர், போராட்டத்தில் பங்கேற்றுள்ள 23 இஸ்லாமிய கூட்டமைப்பினரின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ttn

அந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு வரும் 19 ஆம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் 3 ஆவது நாளாக விடிய விடிய நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.