விடிஞ்சும் விடியாததுமா கஸ்தூரிக்கு வந்த சந்தேகத்தைப் பாருங்க‌!

 

விடிஞ்சும் விடியாததுமா கஸ்தூரிக்கு வந்த சந்தேகத்தைப் பாருங்க‌!

என் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள்னு அறிவிக்காததுதான் பாக்கி. அவங்களோட ட்விட்டர் அக்கவுண்ட் மூலமா இந்த கேள்விய பொதுவில வச்சிருக்காங்க. தெரிஞ்சவங்க பதில் சொல்லி பரிசு குடுத்தா வாங்கிக்கங்க.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா இந்த அல்வா கஸ்தூரி இம்சை தாங்க முடியலை. எப்பாடுபட்டாச்சும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரிய கொண்டுபோய் அடைச்சுட்டு வாங்க‌டான்னு தலதலயா அடிச்சுக்கிட்டேன், கேட்டாய்ங்களா? இப்பப் பாருங்க, விடிஞ்சும் விடியாததுமா நம்ம கஸ்தூரிக்கி ஒரு சந்தேகம். என் சந்தேகத்தை தீர்த்து  வைப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள்னு அறிவிக்காததுதான் பாக்கி. அவங்களோட ட்விட்டர் அக்கவுண்ட் மூலமா இந்த கேள்விய பொதுவில வச்சிருக்காங்க. தெரிஞ்சவங்க பதில் சொல்லி பரிசு குடுத்தா வாங்கிக்கங்க.

Kasthuri

அதாகப்பட்டது, கஸ்தூரியோட சந்தேகம் என்னன்னா, “கண்ணீரும் கம்பலையும் என்கிறார்களே, கம்பலை என்றால் என்ன? கந்தக்கோளம் என்ற சொல்லின் ஆரம்பமும் அர்த்தமும் யாது?” இவைதான் கஸ்தூரியின் சந்தேகங்கள். எமக்குத் தெரிந்த விளக்கத்தைக் கூறுவோம். கம்பலைன்னா, அடித்துகொண்டு அழுவது, உருண்டு புரண்டு அழுவது.
இரண்டாவது சந்தேகமான கந்தக்கோளம். ஆக்ச்சுவலி அது கந்தக்கோளம் இல்லை, மாறாக‌ கந்தக்கோலம். ஆறுமுகக் கடவுள் ரிஷப வாகனத்தில் உமை ஒரு புறமும், ஈஸ்வரன் மறுபுறமும் இருக்க இருவரின் நடுவே அழகே வடிவமாய் கந்தன் அமர்ந்துள்ள கோலமே சோமாஸ்கந்த கோலமாகும்.