விஞ்ஞான புலிக்கு நன்றி தெரிவித்த கலைப்புலி

 

விஞ்ஞான புலிக்கு நன்றி தெரிவித்த கலைப்புலி

போனோகிராஃப் எனும் ஒலிக்கருவியை கூட கண்டுபிடித்துள்ளார்.மேலும் நகரும் படம் எனப்படும் மோஷன் பிக்ச்சர் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான்.அதனால் இன்றைய திரைத்துறைக்கு அடித்தளமிட்டதே எடிசன் தான்.திரைத்துறை தோன்ற அளப்பரிய பங்காற்றிய தாமஸ் ஆல்வா எடிசனை நினைவு கூறும் விதமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகத்தையே ஒளிமயமாக்கிய தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்த தினம் இன்று.எடிசன் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.அனைத்திற்கும் காப்புரிமையும் பெற்றிருக்கிறார்.விஞ்ஞான உலகில் எடிசனின் பங்கு அளப்பரியது.பல்பு கண்டுபிடித்தது யார்? எனக் கேட்டால் சிறு குழந்தை கூட சொல்லி விடும் எடிசன் என்று. 

thomas

இன்று நாம் சுவிட்சை தட்டியவுடன் எரியும் மின்விளக்கை கண்டுபிடிக்க எடிசன் தன் வாழ்நாள் முழுதும் அர்பணித்துள்ளார். இன்றைய நவீன உலகில் எடிசனின் கண்டுபிடிப்பை நீக்கி விட்டால் உலகம் ஸ்தம்பித்து விடும். 

 

 

போனோகிராஃப் எனும் ஒலிக்கருவியை கூட கண்டுபிடித்துள்ளார்.மேலும் நகரும் படம் எனப்படும் மோஷன் பிக்ச்சர் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான்.அதனால் இன்றைய திரைத்துறைக்கு அடித்தளமிட்டதே எடிசன் தான். 

thomas.jpg1

திரைத்துறை தோன்ற அளப்பரிய பங்காற்றிய தாமஸ் ஆல்வா எடிசனை நினைவு கூறும் விதமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ மிகப்பெரிய விஞ்ஞான ஜாம்பவான்
தாமஸ் ஆல்வா எடிசனின்பிறந்த தினம் இன்று. உலகெமெங்கிலும் 
உள்ள திரைத்துறை அவருக்கு என்றும் நன்றியுடையதாக இருக்கும். என்றும் வர நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்” என்றும் பதிவிட்டிருந்தார்.