விஞ்ஞானப்பூர்வமாக கருத்து சொல்லியிருக்கிறார் முதல்வர்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

 

விஞ்ஞானப்பூர்வமாக கருத்து சொல்லியிருக்கிறார் முதல்வர்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ஹெலிகாப்டரிலேயே சென்று கணக்கு எடுத்துள்ளதாக விஞ்ஞானப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக கருத்தைச் சொல்லியிருக்கிறார் என முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்

சென்னை: ஹெலிகாப்டரிலேயே சென்று கணக்கு எடுத்துள்ளதாக விஞ்ஞானப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக கருத்தைச் சொல்லியிருக்கிறார் என முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்து உள்ளது.

இதையடுத்து, பிரதமர் மோடியை சந்தித்து நிவாரணம் கோர முதல்வர் டெல்லி சென்றார். அப்போது, புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த அவர், புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, பிரதமரிடம் சேத மதிப்பு குறித்த மனு அளிக்கப்பட்டு உள்ளது இடைக்கால நிவாரணமாக ரூ1500 கோடி உடனடியாக வழங்க கோரிக்கை வைத்து உள்ளோம். நிரந்தர நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது குறித்து பேசிய முதல்வர், அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால் ஹெலிகாப்டரில்  சென்றேன். ஹெலிகாப்டரில் சென்றதால்தான் புயல் பாதிப்பு முழுமையாக தெரிந்தது என்றார்.

இந்நிலையில், ஹெலிகாப்டரிலேயே சென்று கணக்கு எடுத்துள்ளதாக விஞ்ஞானப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக கருத்தைச் சொல்லியிருக்கிறார் என முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.