விஜே ஆன விஜய் மகன்..! விக்ரம் பட இயக்குநருடன் முதல் பேட்டி

 

விஜே ஆன விஜய் மகன்..! விக்ரம் பட இயக்குநருடன் முதல் பேட்டி

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ளார்.

சென்னை: தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், சமீபத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து ஃபிலிம் மேக்கிங்கில் ஆர்வம் காட்டி வரும் சஞ்சய், தனது நண்பர்களுடன் இணைந்து முதல் முயற்சியாக குறும்படம் ஒன்றை இயக்கி நடித்துள்ளார்.

சஞ்சய் நடித்த ‘ஜங்ஷன்’ என்ற குறும்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்பாவை போலவே அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பதாக சஞ்சய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், சஞ்சய் விஜய் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார். விஜே ஆக மாறியுள்ள சஞ்சய், முதலில் பேட்டி எடுத்தது சீயான் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர். ஆனந்த் ஷங்கரின் ஃபிலிம் மேக்கிங் குறித்தும், அவரது கதை உருவாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் கேள்விகளை கேட்டு தகவல்களை சேகரித்துள்ளார்.

இந்த வீடியோ யூடியூபில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்தின் மகனான ஜேசன் சஞ்சய் விஜய்யின் சினிமா பயணம் எப்போது தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் தளபதி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.