விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அஜித் ரசிகர்..!

 

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அஜித் ரசிகர்..!

‘தல’ தாண்டா கெத்து, ‘தளபதி’ தாண்டா கெத்து என விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் பெரும்பாலாக மோதல்களே நடக்கும்.

‘தல’ தாண்டா கெத்து, ‘தளபதி’ தாண்டா கெத்து என விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் பெரும்பாலாக மோதல்களே நடக்கும். ஆனால், விஜய்யும் அஜித்தும் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இன்றி இருந்து வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிகில்’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று திடீரென விஜய்யின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

Vijay

அதில், ஒரு நபர் ‘உங்கள் வீட்டில் வெடி குண்டு வைத்திருக்கிறோம், அது இன்னும் சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும்’ என்று கூறிவிட்டு உடனே அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பிறகு, காவல் துறையினரின் உதவியுடன் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, பனையூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. 

Vijay home

அதனையடுத்து, அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் விஜய்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போரூர் பகுதியைச் சேர்ந்த நபர் என்றும் அவர் அஜித் ரசிகர் என்பதால் ‘பிகில்’ படத்தின் வெற்றியைப் பொறுக்கமுடியாமல் குடி போதையில் விஜய்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வெடிகுண்டு வைத்ததாகக் கூறியது பொய் என்றும் அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.