விஜய் வீடியோ வெளியிட்டு ஓட்டு போடச் சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்

 

விஜய் வீடியோ வெளியிட்டு ஓட்டு போடச் சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்பட பாணியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஓட்டு போடா சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை: தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்பட பாணியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஓட்டு போடா சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தமிழகமே பரபரப்பாக உள்ளது.நேற்று மாலையோடு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில்,யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள். அதையடுத்து, சினிமா பிரபலங்கள் பலரும் கண்டிப்பாக வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

sarkar

அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தைக் கூறும் விதமாக விஜய் பேசும் வசனங்கள் கொண்ட சர்கார் திரைப்பட வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ‘ஒரே ஒரு ஓட்டு பல நாடுகளில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியிருப்பதை எடுத்துக் கூறும் விஜய், ஒரு குடிமகனின் குறைந்தபட்ச தேசப்பற்றே ஓட்டுப்போடுவது தான். எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும், அதனை தூக்கிப்போட்டுவிட்டு ஓட்டு போடுங்கள் என்று விஜய்’ அதில் பேசியிருப்பார். 

இதையும் படிங்க: நோட்டாவுக்கு ஒட்டு போடாதீங்க…வெங்கட் பிரபு வேண்டுகோள்…