விஜய், ரஜினிக்கு அடுத்து சிவகார்த்திகேயனா? ரசிகர்கள் ஆச்சர்யம்!

 

விஜய், ரஜினிக்கு அடுத்து சிவகார்த்திகேயனா? ரசிகர்கள் ஆச்சர்யம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சிவகார்த்திகேயனை டார்கெட் செய்திருக்கிறதாம்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சிவகார்த்திகேயனை டார்கெட் செய்திருக்கிறதாம்.

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை விநியோகம் செய்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘எந்திரன்’ திரைப்படத்தின் மூலம் படத் தயாரிப்பில் ஈடுபட்டது. இதன் மூலம் நல்ல வசூலை கண்டாலும், சில அரசியல் சிக்கல்கள் மற்றும் நடிகர்களின் நிலையில்லாத வெற்றி, தோல்வி உள்ளிட்ட காரணங்களால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது.

sunpictures

இந்நிலையில், தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்புக்கு ரீ-எண்ட்ரி கொடுத்த சன் பிக்சர்ஸ் இந்த படத்தின் மூலம் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தாலும், வசூலையும் வாரிக் குவித்தது. விஜய்யின் ‘சர்கார்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ திரைப்படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது.

sarkar

இதனையடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், இளம் ஹீரோவான சிவகார்த்திகேயனை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம். ரஜினி, விஜய்க்கு இருக்கும் அளவு சிவகார்த்திகேயனுக்கும் ஓப்பனிங் வசூல் இருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த பின்னர் சன் பிக்சர்ஸ் இம்முடிவை எடுத்துள்ளதாம்.

petta

அடுத்த சூப்பர் ஸ்டார் இமேஜிற்கு ஏற்ப சிவகார்த்திகேயனுக்காக கதை ரெடி பண்ணுமாறு 3 இயக்குநர்களிடம் சன் பிக்சர்ஸ் தெரிவித்திருப்பதாகவும், அதில் ஒருவர் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிறுத்தை சிவா என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸின் இந்த அடுத்த வசூல் மன்னன் கணக்கு சிவகார்த்திகேயன் விஷயத்தில் சரிவருமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.