விஜய் படத்தை மட்டும் கொண்டாடுவது ஒருவிதமான மனநோய்: ரசிகர்களை விமர்ச்சித்த இயக்குநர்!

 

விஜய் படத்தை மட்டும் கொண்டாடுவது ஒருவிதமான மனநோய்: ரசிகர்களை விமர்ச்சித்த இயக்குநர்!

மலையாள படங்கள் வசூல் செய்ததை கொண்டாடாமல், விஜய் படத்தை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று கேரள ரசிகர்களை ஒடியான் பட இயக்குநர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கேரளா: மலையாள படங்கள் வசூல் செய்ததை கொண்டாடாமல், விஜய் படத்தை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று கேரள ரசிகர்களை ஒடியான் பட இயக்குநர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

odiyan

அறிமுக இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஒடியான். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

shrikumar

சமீபத்தில் நடைபெற்ற ஒடியான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டஇயக்குநர் ஸ்ரீகுமார், ‘மலையாள படங்கள்  வசூல் செய்ததை  கொண்டாடாமல் விமர்சிக்கிறார்கள். ஆனால் விஜய் படத்தின்  வசூலை  மட்டும் கொண்டாடுகிறார்கள். இதை ஒருவிதமான மனநோய் என்றுதான் கூறுவேன்’ என்று கூறினார். இயக்குநரின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒடியான் படத்தை விளம்பரப்படுத்தவே இயக்குநர் ஸ்ரீ குமார் விஜய்யை விமர்சிக்கிறார் என்று  விஜய் ரசிகர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.