விஜய் படத்தின் பாடல் வரியை கைப்பற்றிய ஜோதிகா 

 

விஜய் படத்தின் பாடல் வரியை கைப்பற்றிய ஜோதிகா 

நடிகை ஜோதிகா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை ஜோதிகா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

கிட்ட தட்ட திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா தனது செகண்ட் இன்னிங்க்ஸை சரியாக பயன்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால் 36 வயதிலனே படம் தொடங்கி தற்போது வெளியான ராட்சசி படம் வரை அனைத்து படங்களும் ஹிட் அடித்துள்ளன. 

அதைத்தொடர்ந்து தற்போது ‘ஜாக்பாட்’ மற்றும் கார்த்தியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் அவர் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம்.. என்றென்றும் புன்னகை பட இயக்குநர் ஜேஜே ஃபெட்ரிக் இயக்கவுள்ள புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. 

தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் பெயர் ‘பொன்மகள் வந்தாள்’  என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் படத்தில்  பொன்மகள் வந்தாள் என்று தொடங்கும் பாடல் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.