விஜய் நடிக்கும் சினிமாதான் காப்பி…. மேடை பேச்சுக்கூட காப்பியா? பெண் பேச்சாளரின் பேச்சை உல்டா செய்து பேசுவதாக சர்ச்சை !

விஜய் நடிக்கும் சினிமாதான் காப்பி…. மேடை பேச்சுக்கூட காப்பியா? பெண் பேச்சாளரின் பேச்சை உல்டா செய்து பேசுவதாக சர்ச்சை !

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய குட்டி கதை பிரபல பெண் பேச்சாளர் ஒருவர் பேசியது என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனைவரின் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது. பிகில் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். 

vijay

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அவர் பேசிய குட்டிக்கதையில்  பூக்கடையில் வேலை செய்யும் சிறுவனுக்கு வெடி கடையில் வேலை தந்தால் பழக்க தோஷத்தில் பட்டாசுகள் மீது 5 நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிப்பான் சிறுவன். எனவே யாருக்கு எந்த இடத்தை தர வேண்டுமோ, அந்த இடத்தை தர வேண்டும், என்று நடிகர் விஜய் தமிழக அரசியலை மறைமுகமாக சாடினார். 
நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் ஏற்கனவே பிரபல பெண் மேடை பேச்சாளர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு பேச்சிலும் ஒரே கதைதான். மேலும் ”இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து” என்று திருக்குறளை விஜயும் தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார். அதாவது பெண் பேச்சாளர் பேசியதை உல்டா செய்து மாற்றி மாற்றி பேசி உள்ளார் விஜய். 
ஏற்கனவே விஜய் நடிக்கும் படங்களில் மற்றொருவரின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் தற்போது அவரின் மேடைப் பேச்சு காப்பி அடித்துதான் பேசுகிறார் என்ற புது சர்ச்சை புறப்பட்டுள்ளது.