விஜய் தொலைக்காட்சியிலிருந்து விரட்டி விடப்பட்ட மீரா: வைரல் வீடியோ 

 

விஜய் தொலைக்காட்சியிலிருந்து விரட்டி விடப்பட்ட மீரா: வைரல் வீடியோ 

மீரா மிதுன் விஜய் டிவியில் இருந்து விரட்டி விடப்பட்ட  வீடியோ வைரலாகி வருகிறது. 

சென்னை: மீரா மிதுன் விஜய் டிவியில் இருந்து விரட்டி விடப்பட்ட  வீடியோ வைரலாகி வருகிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் நடத்திய மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். ஆனால் அழகிப்போட்டி நடத்தப்போவதாகக் கூறி பல பெண்களிடம் பணம் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதனால் அவருக்கு வழங்கிய பட்டத்தை ஃபெமினாஸ் நிறுவனம் திரும்பப் பெற்றது . 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரு சொல்வதையும் காதில் வாங்கி கொள்ளாமல் நடந்து கொல்வதால் ஹவுஸ் மேட்ஸ்கள் மத்தியில் மட்டுமின்றி பார்வையாளர்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். அப்போது மீரா, தன்னுடன் ஜோடியாக நடனம் ஆடிய நபரை முகத்தில் கை வைத்து தள்ளியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நடுவாரான, நடிகை சங்கீதா அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். 

அப்போது எப்பவும் போல் பிளேட்டை மாற்றிப்போட்டு மீரா பேசியுள்ளார். மீராவின் பேச்சைக்கேட்டு எரிச்சலான நடிகை சங்கீதா, இப்போது கம்ப்ளையன்ட் செய்வதை நிறுத்துங்கள், ஜஸ்ட் கெட் அவுட்’ என்று கூறி உடனே அவர் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி  வைரலாக பரவி வருகிறது.