விஜய் தேவர்கொண்டா-ராஷ்மிகா படத்தின் ட்ரைலர் வெளியானது 

 

விஜய் தேவர்கொண்டா-ராஷ்மிகா படத்தின் ட்ரைலர் வெளியானது 

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைந்து டியர் காம்ரேட் படத்தில்  நடித்துள்ளனர். பரத் கம்மா இயக்கியிருக்கும் இப்படத்தை  மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன் வெளியான இந்த படத்தின் டீசரும், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஒரே டேக்கில் உருவான ‘கேண்டீன் சாங்’கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது. அதில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீராங்கனையான ராஷ்மிகா மீது விஜய் தேவரகொண்டா காதல் வயப்படுகிறார். காதல், ஆக்‌ஷன், தோல்வி, பயணம் என்று உருவாகியுள்ள ட்ரைலர் ரசிகர்களிடையே   நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.