விஜய் தளபதியா? ரசிகரின் சந்தேகத்திற்கு உதயநிதி பதில்!

 

விஜய் தளபதியா? ரசிகரின் சந்தேகத்திற்கு உதயநிதி பதில்!

நடிகர் விஜயை தளபதி என்று அழைப்பது தொடர்பாக ரசிகர்கள் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஜயை தளபதி என்று அழைப்பது தொடர்பாக ரசிகர்கள் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழக அரசியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ‘தளபதி’ என்று அழைப்பார்கள். கட்சியின் நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களிலும் ஸ்டாலினை ‘தளபதி’ என்று அழைப்பதே வழக்கம். இதேபோல் தமிழ் திரையுலகில் ‘இளைய தளபதி’ என்று அழைப்பட்டு வந்த நடிகர் விஜயை ரசிகர்கள் தற்போது ‘தளபதி’ என அழைக்கின்றனர்.

சமீபத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய் சர்கார் பற்றியும், தமிழகத்தை ஆண்டு வரும் சர்கார் குறித்தும், அரசியல், தலைவன் குறித்து பல விஷயங்களை பேசினார்.

சர்கார் படத்தில் முதல்வராக நடிக்கவில்லை என்றும், நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கூறியதன் மூலம், கமல்-ரஜினி பாணியில் விஜய்யும் அரசியலுக்கு ஆயத்தமாகிறாரா என்ற பேச்சு நிலவி வருகிறது.

இந்நிலையில், விஜயை பலரும் தளபதி என்று அழைப்பதை திமுகவினர் எப்படி பார்க்கின்றனர் என ரசிகர் ஒருவர் உதயநிதி ஸ்டாலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் ட்வீட் போட்ட உதயநிதி, ‘ஆம்..திரையுலக தளபதி விஜய் அண்ணா.. திரையுலக தல அஜித் சார்.. சரி தான்!’ என்று ட்வீட்டியுள்ளார். உதயநிதியின் இந்த சர்ச்சை ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.