விஜய் சேதுபதி 25: நல்ல நடிகரை பரிந்துரைத்த நண்பருக்கு சீனுராமசாமி நன்றி!

 

விஜய் சேதுபதி 25: நல்ல நடிகரை பரிந்துரைத்த நண்பருக்கு சீனுராமசாமி நன்றி!

ஒரு நல்ல நடிகரை தன் படத்தின் நாயகனாக நடிக்க பரிந்துரை செய்த ஒளிப்பதிவாளருக்கு இயக்குநர் சீனுராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: ஒரு நல்ல நடிகரை தன் படத்தின் நாயகனாக நடிக்க பரிந்துரை செய்த ஒளிப்பதிவாளருக்கு இயக்குநர் சீனுராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், கெஸ்ட் ரோல் என அனைத்திலும் எதார்த்த நடிப்பை அள்ளித் தெளிக்கும் நடிகர் விஜய் சேதுபதி 25 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது 25வது திரைப்படம் ‘சீதக்காதி’ ஆகும்.

விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். டிராமா ஆர்ட்டிஸ்டாக நடிக்கும் விஜய் சேதுபதி 30,50, 75 வயது என மூன்று பரிமானங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படம் குறித்தும் விஜய் சேதுபதியை பாராட்டியும் இயக்குநர் சீனுராமசாமி கருத்து பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட்டில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25 படங்கள் கடந்து செல்லும் இந்த வேளையில் அவரை தென்மேற்கு பருவக்காற்றில் நடிக்க என்னிடம் அழைத்து வந்தவர் நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ். ஒரு நல்ல நடிகரை என் தேர்வுக்கு அனுப்பிய அவரின் நட்புணர்வுக்கு நன்றி’ என்று பகிர்ந்துள்ளார்.